18

siruppiddy

ஆகஸ்ட் 26, 2013

இரவோடு இரவாக சிறிலங்கா இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேற்றம்!


 சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லும் அவர், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்திப்பார்.  பின்னர், அங்கிருந்து கிளிநொச்சிக்குப் புறப்படுவார்.

ஏ9 வீதியால் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டம் மற்றும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.

இறுதிப்போர் நடந்த புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளையும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.

இந்நிலையில் ஆணையாளரின் வருகைக்கு முன்னர் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

போர்த்தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், நேற்று இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அங்கு இருந்த இராணுவ மினிமுகாம், காவலரண்கள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக