18

siruppiddy

ஆகஸ்ட் 12, 2013

மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு :இலங்கை கடல்,,


 இலங்கை கடல் எல்லைக்குள் வந்து டோலார் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றில் பிரபல அமைச்சர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளதாகவும்  இதனடிப்படையில் எதிர்காலத்தில் சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஆரம்பிக்கும் எனவும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்திற்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கும், எஞ்சிய 60 வீதம் அமைச்சரின் இணைப்புச் செயலாளருக்கு சொந்தமான கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனவும் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இரண்டு சீன கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அதனை பிடித்து இலங்கை கடற்படையினர் சீனாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் முக்கியமான அமைச்சர் ஒருவர் சீனாவுக்கு சென்று,  சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், இலங்கை கொடியுடன் மீன்பிடிக்கும் வகையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் டோலார்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கையின் மீன்பிடி தொழிலை கடுமையாக பாதிக்க செய்யும் என இதற்கு எதிராக போராட்டங்களை நடத்த போவதாகவும் இலங்கை மீன்பிடி சங்கங்கள் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக