18

siruppiddy

ஆகஸ்ட் 03, 2013

மாணவன் கொலைக்கு அரசாங்கமே பொறுப்பு


வெலிவேரிய மோதலில் பாடசாலை மாணவரான அக்கில தினேஸ் கொல்லப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடங்க அரசாங்கம் இராணுவத்தை ஏவி மேற்கொண்ட தாக்குதலில் 17 வயது பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.
உரிமைக்காக போராடிய மக்கள் மீது இராணுவம் பொலிஸார் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தியதில் நிராயுதபாணிகளாக இருந்த பொது மக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக