18

siruppiddy

ஆகஸ்ட் 11, 2013

கொல்லப்பட்ட மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை

 
 
வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்காக அரசாங்கமோ அமைச்சர்களோ இதுவரையில் ஏன் மன்னிப்பு கோரவில்லை என அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
படையினரால் கொல்லப்பட்ட மூன்று பேருக்காக அமைச்சர் ஒருவர் மன்னிப்பு கோரியமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரியவில் இராணுத்தினர் நடந்து கொண்ட விதம், வடக்கு கிழக்கில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதனை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தெரிவித்தள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் படையினர், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான ஓர் விழிப்புணர்வாக வெலிவேரிய சம்பவத்தை தெற்கு மக்கள் கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதனை பாதுகாப்புச் செயலாளரும் அரசாங்கமும் ஒப்பு;க் கொண்ட போதிலும் இதுவரையில் யுத்த கால பொதும்ககள் உயிரிழப்புக்காக மன்னிப்பு கோரப்படவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக