தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் சூழ்ச்சியா ?
முருகன் குமாரவேல் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறியுள்ளன. வேட்புமனு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
வேட்புமனுவை தாக்கல் செய்யச் சென்றபோது வேட்பாளார் ஒருவரின் சத்திக்கூற்று பத்திரம் தவறவிடப்பட்டதாகவும் இதனால் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனாலும் தவறவிடப்பட்ட சத்தியக்கூற்று கiதிரையின் கீழ் இருந்து 10 நிமிடத்துக்குள் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் ஒப்படைத்ததாகவும் எனினும் அரச அதிபர் அதனை ஏற்க மறுத்ததாகவும் முருகன் குமாரவேல் தெரிவித்தார்.
ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்று வெள்ளிக்கிழமை இறுதி நாள் என்றும் தவறவிடப்பட்ட வேட்பாளரின் சத்தியக்கூற்று நண்பகல் 12மணிக்கு பின்னரே மீள ஒப்படைக்கப்பட்டதால் அதனை நிராகரித்ததாகவும் யாழ் செயலக அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் கூறினார்.
இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறாது என கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையும் வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறுகின்றன. அரசாங்கத்தின் பின்னணியுடன் குறித்த சுயேற்சைக்குழு செயற்படுவதாக யாழ்ப்பாண தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பரிய அறிவித்திருந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக