சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக சிங்கள இளைஞர் அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிதுள்ளார்.
இதன்பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் அவரது கையை பின்னால் கட்டி வைத்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
ஆயினும் பொது மக்கள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
படுகாயமடைந்த இளைஞரை பொது மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக