யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாவிதன்வெளிப் பிரதேசமானது கடந்த காலப் போர்ச்சூழலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இங்குள்ள மக்கள் பலர் பல்வேறு வசதிகளற்ற நிலையிலேயே வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மத்திய முகாம், சவளக்கடை, 4ஆம் கிராமம், குடியிருப்புமுனை, வேப்பையடி போன்ற பல கிராமங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மத்திய முகாம் உட்பட பல இடங்களில் மீளக்குடியேறியுள்ள மக்கள் தொடர்ந்தும் வசதிகளற்ற நிலையில் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக வீட்டு வசதி, வாழ்வாதார வசதி, வீதி அபிவிருத்தி, ஆலயங்களின் புனரமைப்பு, சிறுவர் அபிவிருத்தி, சுயதொழில் வாய்ப்புக்கள் என வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அம்மக்கள் கேட்கின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக