மன்னிப்பு கோரியது சிறிலங்கா சிறிலங்காவின் கோமாளி அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்னிப்பு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உயர் ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு அமைச்சர் ஒருவரை கருத்து வெளியிட அனுமதித்தமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையை மணக்க விரும்புகிறேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமைக்கு முழு நாட்டு மக்களும் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக