18

siruppiddy

ஆகஸ்ட் 06, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக்"



வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்; கலந்துகொள்ளவுள்ளனர்.
முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக பல பாரிய தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதெனவும் தமிழ்க் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும்; ஒன்றிணைத்து வடக்கில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் 11 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்தே யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக