18

siruppiddy

ஆகஸ்ட் 01, 2013

மனித உரிமை நிலமைகளில் முன்னேற்றம்

ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.இலங்கை  மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகளை கிரமமாக நடாத்துமாறு சர்வதேச நாடுகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் சரியான முறையில் நடாத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2006 ஆகஸ்;ட் 4ம் திகதி மூதூரில் அக்செய்ன் பார்ம் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பல்வேறு ஆணைக்குழுக்களின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளது. மூதூர் தன்னார்வ தொண்டர் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக