18

siruppiddy

ஆகஸ்ட் 14, 2013

புலனாய்வு நிபுணர்களின் உதவியை நாடும் அமெரிக்க



தமது அரசின் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் மேற்பார்வை தராதரங்கள் குறித்து அறிவுரைகளைப் பெற புதிய குழுவொன்றை ஸ்தாபிக்க உள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பெர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
 இக்க்குழுவானது தான் இனங்காணும் திருத்தங்களை இன்னும் 60 நாட்களுக்குள் மீளாய்வு செய்து அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்து அதன் பின் இறுதி அறிக்கையினைத் தயாரிக்கவுள்ளது.
 ஆக்ஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அதிபர் ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளார். அதில் அவர் புலனாய்வுத் தொழிநுட்பங்களுக்களை மீளாய்வு செய்வதற்காகத் தமது அரசு உயர் மட்டக் குழுவொன்றை அமைத்திருப்பதாக பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். அதிபர் ஒபாமாவுக்கு குறித்த குழு தமது முடிவுகளைச் சமர்ப்பித்த பின் இறுதி அறிக்கை 2013 டிசம்பர் 15 இற்கு முன்னரே தயாரிக்கப் படும் எனக் கூறப்படுகின்றது.
 இக்குழுவில் எத்தனை பேர் உள்ளனர் என்றோ அல்லது பங்குபெறுபவர்களின் சுய விபரமோ வெளியிடப்படவில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறையான NSA இன் முன்னால் உறுப்பினர் எட்வர்ட் ஸ்னோவ்டென் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் யாவும் அத்துமீறி பொது மக்களின் தகவல்களை தொலைபேசி மற்றும் இணையத்திலுள்ள முக்கிய தளங்களில் (electronic information) இருந்து திருடி நோட்டமிடுவதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைக் கசிய விட்டிருந்தார். இதன் பின் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியே அதிபர் ஒபாமா இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
 இந்நிலையில் அதிபர் ஒபாமா புதிய உயர் மட்டக் குழுவின் உதவியுடன் மக்களின் சுய உரிமையைப் பாதிக்காத வண்ணம் அதிக சிரத்தையுடனும் நம்பகத் தன்மையுடனும் புலனாய்வுத் திணைக்களங்கள் தொழிற்படும் என உறுதியளித்துள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக