18

siruppiddy

ஆகஸ்ட் 21, 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது


கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று நேற்று மீண்டும் லோக்சபாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதனை வலியுறுத்தின.
நேற்று லோக்சபாவில் உரையாற்றிய அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதுரை இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை இந்தியா மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை கருத முடியாது என்று�� திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எந்த அழுத்தங்களையும் இலங்கை பொருட்படுத்தியதில்லை.
இந்தியாவின் பேச்சுக்கு மதிப்பளிக்காக இலங்கையை நட்பு நாடாக கருத முடியாது என்று அவர் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக