
மன்னிப்பு கோரியது சிறிலங்கா சிறிலங்காவின் கோமாளி அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை...