18

siruppiddy

ஜூன் 11, 2013

தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா

 
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது.
தொடர்புடைய விடயங்கள்பாஜக, அத்வானி
அவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது.
கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலேயே அத்வானியின் ராஜினாமாவை நிராகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் என்கிற முறையில் இந்த ராஜினாவை எந்த சந்தர்பத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனது முடிவை மாற்றி கொள்ள அத்வானி மறுத்துவிட்டார் என்று டில்லியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானியின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியாகியது.
கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார்.
பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர், தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார்
நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானியின் ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக