18

siruppiddy

ஜூன் 12, 2013

குறி வைத்து காத்திருக்கும் அமெரிக்கா! "


சிறிலங்காவின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
   சிறிலங்காவில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.
  நேற்று நியுயோர்க்கில் ஐ.நா செயலகத்தில், இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  சிறிலங்காவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ், ஸ்டீபன் ராப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
  அதற்குப் பதிலளித்த ஸ்டீபன் ராப்,
  “சிறிலங்காவில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை சிறிலங்காவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
  சிறிலங்கா அரசாங்கத்துடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை ராஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படும் படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது.

 தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிகக்கவனமாக அவதானித்து வருகிறது.

 இறுதிக்கட்ட போரின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமை வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக