ஐ.பி.எல் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் 16 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பினை வழங்கியுள்ளது.
27 நாட்கள் சிறைக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து ஸ்ரீசாந்த் நேற்று விடுதலையானார். அவர் தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள கொச்சிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் ரசிகர்களும், உறவினர்களும் அவரை வரவேற்றனர்.
கொச்சி விமான நிலையத்தில் ஸ்ரீசாந்த் நிருபர்களுக்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் நான் சுத்தமானவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.
எனது எதிரிக்கு கூட இது மாதிரியான நிலைமை வரக்கூடாது. நான் எந்தவித தவறும் செய்யவில்லை. என்னை நம்புங்கள் எனது பயிற்சி தொடரும். கேரளா திரும்பியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மறக்க நினைக்கிறேன். பெற்றோர், நண்பர்கள் ரசிகர்களுடன் இனி எனது பொழுதை கழிப்பேன் என கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் ‘‘தான் எப்போதுமே டவலை அணிந்து கொண்டுதான் பந்து வீசுவேன்’’ என்று கூறியுள்ளார்,( காணொளி இணைப்பு)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக