18

siruppiddy

ஜூன் 03, 2013

மூன்றாவது உலகப் போருக்கான களமாக???

மும்பாயில் நவம்பர் 2008 நடந்த தாக்குதலின் முக்கிய அல் கய்தா சூத்திரதாரி சிறீலங்காவிலிருந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. அண்மைக் காலமாக சீனாவினதும் ஈரானினதும் நீர்மூழ்கி கப்பல்களும் ஆயுதக் கப்பல்களும் சிறீலங்கா துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறது.
 அதேவேளை, சீனாவின் புலனாய்வுப் பிரிவின் மூத்த தளபதி அண்மையில் சிறீலங்காவுக்கு திடீர் விஜயம் செய்ததோடு யாழ் கோட்டை பகுதிக்கும் அதிரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதற்கான உரிய காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க இந்தியாவின் புலனாய்வுப்பிரிவுப் தளபதி கடந்த வாரம் திடீர் விஜயமாக தமிழீழப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
 இத்தருணத்தில் அமெரிக்காவின் பிரதான இரு எதிரி நாடுகளான சீனாவும் ரசியாவும் சிறீலங்காவோடு ஆழமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனை பின்வரும் அதிரவைக்கும் செய்திகள் ஊடாக அறியலாம்.  தற்போது அதிதீவிர சர்ச்சைக்குள் சிக்கியுள்ள கச்சதீவுப் பிரதேசத்தில் சுமார் 10 படகுகளில் சிறீலங்கா கடற்படையோடிணைந்து சீனா கடற்படையும் கூட்டுரோந்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, சிறீலங்காவில் போர் முடிந்ததாக மகிந்தர் அறிவித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசியா அதிநவீன இரட்சத உலங்குவானுர்திகள் 14ஐ சிறிலங்காவுக்கு வழங்குகிறது. இதில் 6 உலங்குவானுர்திகள் கொழும்பை வந்தடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 அமெரிக்க மற்றும் இந்தியாவுக்கு எதிரான சீனா ரசியா மற்றும் ஈரான் சிறீலங்காவில் நிலைகொள்வது உள்நாட்டு போரொன்றுக்கான சாத்தியம் என்பதற்கு அப்பால் மூன்றாம் உலகப் போருக்கான களம் திறக்கப்பட்டுள்ளது போன்றே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக