18

siruppiddy

ஜூன் 22, 2013

ராஜினாமாவை வாபஸ் பெற்ற பாலஸ்தீன பிரதமர்


 கடந்த 20-ம்திகதி திடீரென ராஜினாமா பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, முன்னாள் பிரதமர் சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, இரு வாரங்களுக்கு முன்னர் ரமி ஹம்தல்லாவை புதிய பிரதமராக அதிபர் நியமித்தார். அவருக்கு துணையாக மேலும் 2 துணை பிரதமர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தனது பதவியை ரமி ஹம்தல்லா ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று ஹம்தல்லா, அதிபர் மஹ்மூத் அப்பாஸை  சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் முடிவில் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாலஸ்தீன அரசியலமைப்பு சட்டத்தின் படி, அதிபர் தான் அதிக அதிகாரங்களை கொண்டவர்.
அத்துடன் துணை பிரதமர்களின் அனுமதி இல்லாமல் பிரதமர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால் ரமி ஹம்தல்லாவால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.
ஹம்தல்லா தனக்கும், துணை பிரதமர்கள் இருவருக்கும் சட்டபடி சரியாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை பெறவே இது போன்ற ராஜினாமா நாடகத்தை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக