18

siruppiddy

ஜூன் 27, 2013

மஹிந்தருக்கு எதிரான சதி முயற்சியின் பின்னணியில் சந்திரிக்கா!


தமிழர்களுக்கு அரசியல் பலம் சேர்க்கும் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
 இந்நிலையில் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆளும்கட்சி உறுப்பினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்த விவகாரம், மஹிந்த அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 குறித்த சட்டமூலத்தை பலவீனப்படும் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் பின்னணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செயற்படுவதாக, இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச கண்டுபிடித்துள்ளார்.
 இது தொடர்பாக விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
"தனது மகன் விமுக்தியை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்து சந்திரிக்கா குமாரத்துங்க செயபடுகிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணியில் அவரே இருக்கிறார்.
 சிறிலங்கா அரசாங்கம் தொடங்கியுள்ள 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடித்து- அதனைப் பாதுகாக்கும் திட்டத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளது.
 ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, றெஜினோல்ட் குரே, மற்றும் சிறிலங்கா மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த எதிர்ப்பு அணியில் உள்ளனர்.
 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரை தன்வசம் எடுத்துக் கொள்ள சந்திரிகா முயற்சிக்கிறார்.
 சமஸ்டிவாதிகள், பிரிவினைவாதிகள், ஐதேக, லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாசக் கட்சி, போன்றவற்றை சேர்ந்தவர்களும், விஜய குமாரணதுங்கவின் மக்கள் கட்சியில் எஞ்சியுள்ளவர்களும் இணைந்து. 13வது திருத்தச்சட்ட விவகாரத்தை வைத்து ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஐதேகவை அரியணை ஏற்ற முனைகின்றனர்.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிளவை ஏற்படுதலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இது வெறும் பகல் கனவு" என வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக