கிளிநொச்சி இராணுவ முகாமில் தமிழ் இளம் பெண் சடலம் -
இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.
கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி – சரோஜா என்ற இவர் சீ.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பனிக்கன்குளம் பகுதியில் ஆளில்லாத வீடு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் இருந்த குறித்த சடலத்தை தனது மகளது சடலம் என தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக