18

siruppiddy

ஜூன் 30, 2013

மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்க தாமதம்


இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்துவருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால், அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின்படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாக கர்ணல் ஹரிகரன் தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் அப்படியான முயற்சிகளில் இலங்கை ஈடுபடும்போது மீண்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக அப்படியான திருத்தங்களை கொண்டுவர இலங்கை முயற்சிக்காது என்றும் அப்படி கொண்டுவந்தால் இந்தியா மாநாட்டுக்கு செல்வது கேள்விக்குறியாகலாம் என்றும் அவர் கூறினார்.
அதனால் இந்தியா தன்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையை ராஜபக்ச அரசாங்கம் ஏற்படுத்தாது என்றும் கூறிய கர்ணல் ஹரிகரன், அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அழுத்தங்களை காங்கிரஸ் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக