இந்தியாவில் தற்பொழுது மோசமான வானிலை நிலவுவதால் இந்திய பயணத்தை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலியா அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
"இந்தியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அக்டோபர் மாதம் வரை யாரும் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
ஏற்கனவே, அங்கு சென்றுள்ள ஆஸ்திரேலியர்கள் தங்கள் வழிகாட்டிகளின் உதவியோடு பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன் சுகாதாரமான உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் கூடிய விரைவில் உடனடியாக நாடு திரும்புவது நலம்.
இந்தியாவில், அக்டோபர் வரை மழைக் காலம் என்பதால், அதுவரை யாரும், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக