18

siruppiddy

ஜூன் 20, 2013

கற்பழித்த கொடூரனுக்கு குவைத்தில் தூக்கு தண்டனை


எகிப்தை சேர்ந்த 33 வயதான ஹஜாத்காடி என்பவன் குவைத் நகரில் தங்கியிருந்த போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான்.
இந்த காம கொடூரனை பிடிக்க பொலிசார் தேடி வந்ததை அறிந்த அவன் குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்ற போது அவனை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதனால் சம்பவம் நடந்த 6 ஆண்டுகளுக்கு பின்பு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று அவன் தூக்கிலிடப்பட்டான்.
இதனைப் போன்றே மற்றொரு எகிப்தியரான அகமது அப்துல்கலாம் அல்-பைலி என்பவன், ஒரு வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை உயிருடன் எரித்து கொன்றதோடு மற்றொரு தம்பதியை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றதனால் அவனுக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் குவைத்தில் கொலைக் குற்றவாளிகள் 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக