18

siruppiddy

ஜூலை 12, 2013

இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் பலி 18 பேர் காயம்!


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் விபத்திற்கு உள்ளானதில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்களை பயிற்சிக்காக கொழும்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று அதிகாலை பேருந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக