18

siruppiddy

ஜூலை 28, 2013

பு ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு கோதபாய


தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார்.
தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஏமாற்றிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட தருணத்தில் எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்கவில்லை எனவும் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவாளர்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதே தமது முதன்மைக் கடமை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை எனவும் அவ்வாறு குரல் கொடுத்தமைக்கான ஓரு ஆதாரத்தையேனும் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமான தீர்மானங்களை எடுத்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குமாறு எவரும் குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறுவர் போராளி பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஒரு சிறுவர் கடத்தல் சம்பவமேனும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக