வெளிநாட்டு தூதுவர்கள் வடமாகாணத்திற்கு செல்வதானால் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் பலர் தேர்தலை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செல்வார்களாயின் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர்கள் தூதுவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தூதுவர்களுடன் தொடர்பு கொண்டு தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியை பெற்று செல்லுமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்தின் தற்போதைய உண்மை நிலைமைகளை தூதுவர்கள் அறிந்து விடக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக் குழு ஒன்று கொழும்புக்கு சென்று தற்போது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக