18

siruppiddy

ஜூலை 12, 2013

காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்!-

-
சிறீலங்கா காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக 64 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மிக மோசமாக ஊழல் மோசடிகள் இடம்பெறும் நிறுவனமாக பொலிஸ் திணைக்களத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க முடியும் என 72 வீதமான மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு சர்வதேச ரீதியில் பொதுமக்களிடம் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக