18

siruppiddy

ஜூலை 12, 2013

85 ஆயிரம் மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில்


வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்று கபே அமைப்பின் அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவதற்காக இந்த பகுதியில் தேர்தல் கண்காணிப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினை என்னவென்றால் வடமாகாண சபை தேர்தல் நடத்துவதுதான் சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கபே அமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது.
வடக்கு மக்களின் குரலை கேட்பதற்கு சர்தோஷம். வடமாகாண தேர்தல் நடத்தக்கூடாது என்று தெற்கிலும் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. வடக்கில் இருக்கும் மக்களில் வாக்களிக்க முடியாதவர்களும் வாக்களிப்பதற்கு கபே பல்வேறு அழுத்தங்களை செய்து வந்துள்ளது.
வடமாகாண சபை தேர்தலின் பிரதான சவால் என்னவென மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். வடக்கிலுள்ள 85 ஆயிரம் பேரிடம் தகுதியான அடையாள அட்டைகளோ வாக்களிக்கும் ஆவணங்களோ இல்லை. இந்நிலையில் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளார்கள்.
தேர்தல் என்பது யாருக்கு? தேர்தல் என்பது வாக்களிப்பது என்பது மட்டுமல்ல. தேர்தல் ஏற்பட்ட சூழல் எவ்வாறு இருக்கின்றது என்பது தான் முக்கியமானதாகும். ஏனைய பிரதேசங்களில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அவ்வாறான சூழல் வடக்கிலும் ஏற்படுத்தவேண்டும்.
யாழ். மக்கள் யுத்தத்தினால் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்கள். அந்த அனுபவங்கள் நிறுத்தப்படவேண்டும். தேர்தல் என்பது மக்கள் தமது தெரிவை சுதந்திரமாக எடுத்துச் சொல்வதேயாகும். இந்நிலையில் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடுபவர்கள் என்ன நோக்கத்துடன் தேர்தலில் குதிக்கின்றார்கள் என்பது பற்றிய சவால்கள் மக்களுக்கு தெரியவில்லை என்றார்.
சர்தேச கண்காணிப்பின்றி நல்ல முறையில் தேர்தல் நடைபெறுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையில் தேர்தல்களின் போது பல்வேறு தரப்பினர் பல்வேறு பிரச்சினைகளை முகம்கொடுத்துவருகின்றனர்.
இந்த பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு மக்கள் தமது குரலை வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இதன் போது தேர்தல் காலங்களில் முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அந்த முறைகேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் அச்சுறுத்தல்களில் இருந்தும் மக்கள் பாதுகாக்கப்படுவார்களா? அவ்வாறான முறைப்பாடுகளின் போது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
பல்வேறு தேர்தல்களின் போது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கபே அமைப்பினால் எமது செயற்பாட்டினை திருப்தியாக முன்னெடுத்து வந்துள்ளோம்.
சமூகத்திற்கு சுயாதீன ஊடகம் தேவைப்படுகின்றது. வடக்கில் தேர்தல் ஒரு தூர நோக்கு என அரசியல் வாதிகள் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் கூட கபே அமைப்பு வடக்கில் தோதலை நடாத்த வேண்டுமென்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்களுக்கு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு யார் எந்த நோக்கத்திற்கு தேர்தலை குழப்புகின்றார்கள் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளைதெற்கில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அந்த நிலையில் யாழ். மற்றும் வடக்கு மாகாணத்திற்கு அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றதாகவும் அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக