ஜனாதிபதி 13 பிளஸ் அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுயதிளித்திருந்தார் - திஸ்ஸ விதாரண
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13வது அரசியல் அமைப்புத் திருத்ததிற்கு அப்பால் சென்று 13 பிளஸ் என்ற அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுதிளித்திருந்தாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள் பல ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகியதாகவும் அதனை ஜனாதிபதி மறுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வக்கட்சி குழுவில் தாம் பணியாற்றிய போது, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக தற்காலிக அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது 13 பிளஸ் என்ற அதிகாரத்தை பரவலாக்கும் யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன் போது கூறியதாகவும் திஸ்ஸ வித்தாரண மேலும் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக