ஒண்டோரியோவில் குழந்தைகளை ஆபாசமாக படமெடுக்கும் குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒண்டோரியோ பிரிமியர் கட்சியின் செய்தி தொடர்பாளர் இன்று விடுத்த அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார். ஆனால் மற்ற விபரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
Benjamin Levin என்ற 61 வயது நபர் மீது நான்கு பிரிவுகளில் டொரண்டோ பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குழந்தைகளை ஆபாச படமெடுத்தல், குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தல், குழந்தைகளிடம் செக்ஸ் குறித்து ஆபாசமாக பேசுதல் மற்றும் 16 வயதுக்கும் குறைவான சிறுமிகளை ஆபாச படமெடுக்க ஒப்பந்தம் செய்தல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்திலும் இதுபோன்ற குற்றங்கள் செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக