தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா காவல்துறை சோதனை
யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபைத் தேர்தல் காலங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணங்களுக்காக யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வடமாகாண சபை தேர்தல் வேட்பாளர்களுக்கான நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளது.
இவ்வாறு கையளிக்கும் காலங்களில் அசம்பாவிதங்கள் எதுவுதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்க அதிபருக்கும் யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்து கருணாரட்ன இடையே யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வேட்பாளர் நியமனங்கள் கையளிக்கும் முதல் நாளிலிருந்து செப்டெம்பர் மாதம் வரை காவல்துறை சாவடி தொடர்ந்தும்அமைந்திருக்கும் என இந்து கருணாரட்ண உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக