18

siruppiddy

ஜூலை 14, 2013

அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது*


 13ம் திருத்தச் சட்டத்தின் காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரங்களை பகிர்வதனால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படாது எனவும் மாறாக அது பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக