18

siruppiddy

ஜூலை 11, 2013

கடற்றொழிளார் உண்ணா விரதப்போராட்டம்


முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தி மாவட்டக் கடற்றொழிலாளர் சமாசத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட உண்ணா விரதப்போராட்டம் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது.
மாவட்டத்தின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றவேண்டும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைக் கட்டுப்படுத்தப்படவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த திங்கள் கிழமை உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பிக் கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட வர்த்தகர் சங்கத்தை கூட்டிய உண்ணா விரதப்போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்கள் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று காலை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதற்கு விளக்கமளிக்கவேண்டும் என புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் பரவலாக வர்த்தகர்களை அச்சுறுத்தி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ,தற்கிடையில் நேற்றய தினம் உண்ணா விரதத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் மற்றும் மக்களுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது திங்கள் கிழமை திருகோணமலைக்கு வருகை தரும் கடற்றொழில் அமைச்சர் றாஜி தசேனாரத்ன செவ்வாய் கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருவார் என குறிப்பிடப் படுகின்றது. எனவே அவர் வரும் நேரத்தில் உண்ணா விரதம் நடத்துவது பற்றியே சிந்தித்தோம் என உண்ணா விரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அமைச்சருக்காகவும், உங்கள் நலன்களுக்குமாகவா போராட்ட ங்களை நடத்தினீர்கள் என கொதித்துப் போயினர். ,தனையடுத்து விடயம் ஒருவாறாக சமாளிக் கப்பட்டு விட்டது. எனினும் மக்கள் ஆத்திரத்துடன் வெளியேறி விட்டனர். உண்ணா விரதப்போர hட்டக் காரர்கள் இதனையடுத்து அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேசினர்.
இதன்போது அமைச்சர் றாஜிதசேனாரத்ன, ஓட்டுக்குழுத் தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தம்முடன் பேசியதாக கூறியதுடன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக தமக்கு வழங்குமாறும் கேட்டுக்கொ ண்டார். இதனையடுத்து உன்மைகள் வெளிவந்து போராட்டம் பிசு பிசுத்துப்போன நிலையில் 2.30 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மற்றும் வினோ ஆகியோர் ஆர்ப்பாட்டக் காரர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக