18

siruppiddy

ஜூலை 03, 2013

மஹிந்த அரசை பலப்படுத்தும் களத்தில் தமிழினி!


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழினியின் உறுப்புரிமைக்கு அனுமதி வழங்குவார் என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
  சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இவருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டவுடன், வட தமி்ழீழத்தில் நடத்தப்படும் தேர்தல் களத்தில், ஆளுந்தரப்பு வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படவுள்ளார். அத்துடன் இவர் இந்தக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலும் வடபகுதியில் ஈடுபடத்தப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
  புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இதேவேளை, கே.பி.எனப்படும் செல்வராசா பத்மநாதன், தயா மாஸ்டர் ஆகியோரையும் அரசதரப்பு வேட்பாளர்களாக களமிறக்கப்படவுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
  இவர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் விண்ணப்பித்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
  எனினும், இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவினால், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டே தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக