18

siruppiddy

ஜூலை 06, 2013

ஊடகவியலாளர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்

 

பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சண்டே லீடர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து பிரெட்ரிக்கா ஜோன்ஸ் போர்கால நெருக்கடிகளை பத்திகையில் எழுதிவந்தார்.

இந்தநிலையில், வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதை சரத் பொன்சேகாவின் வாயால் வரவழைத்துஇ தனது பத்திரிகையில் அவர் எழுதியதால் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். 

இதனையடுத்து அவர் தனது பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக