18

siruppiddy

ஜூலை 15, 2013

மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே?


தமிழக மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே காரணம் என்று ஸ்ரீலங்காவின் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
எல்லை தாண்டிவந்து மீன்பிடிக்குமாறு தமிழக மீனவர்களைத் தூண்டிவிடுவது மட்டுமன்றி, ஸ்ரீலங்காக் கடற்படையினர் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களையும் சுமத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் மீன்பிடித்துறை நீரியல் வள பிரதி அமைச்சரான சரத்குமார குணரத்ன குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக