18

siruppiddy

ஜூலை 06, 2013

பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் இடையூறு


இலங்கையில் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் தலைமையிலானோர் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக முறைப்பாடு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பெளத்த பிக்கு தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தொழுகைகளை நடத்தவி்டாது தடுத்ததாகவும் பின்னர், மீண்டும் இருதரப்பு கூட்டம் நடத்தி முடியும்வரை பழைய பள்ளிவாசலிலேயே தொழுகைகளை நடத்துமாறு பொலிசாரினால் உத்தரவிடப்பட்டதாகவும் மேல்மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பிரதமரின் பொறுப்பிலுள்ள புத்த சாசனம் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சின் அனுமதியை பெற்றே இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக முஜிபூர் ரஹ்மான் மேலும் கூறினார்.
இந்தப் பிரச்சனை தொடர்பில் புத்த சாசன அமைச்சின் அனுமதியுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் புத்த சாசன அமைச்சின் கருத்துக்களை உடனடியாக பெறமுடியவில்லை.
அனுராதபுரம், தம்புள்ளை, பலாங்கொடை உள்ளிட்ட பல இடங்களில் பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக