18

siruppiddy

ஜூலை 09, 2013

புலிகள் என்னை கொலை செய்ய முயற்சித்தனர் –



முற்;போக்கான தலைவர்கள் இல்லாமையே தற்போதைய நிலைமைக்கு காரணம் என நீங்கள் கருதுகின்றீர்களா?
அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திபட்பட்டிருந்தால் இன்று இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. டட்லி சேனாநாயக்க உடன்படிக்கையை அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டிரந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இதற்கு இடமளிக்கக் கூடாது.
எனினும், இலங்கை இந்திய உடன்படிக்கை இலங்கை மீது திணிக்கப்பட்டது ஒன்றல்லவா?
இல்லை, இலங்கை மீது திணிக்கப்படவில்லை.
திணிக்கப்படவில்;லை என எவ்வாறு குறிப்பிட முடியும்?
உடன்படிக்கை இலங்கை மீது திணிக்கப்பட்டது என உங்களால் எவ்வாறு கூற முடியும். 1983ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்கள் இன சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனை எவ்வாறு இனச் சுத்திகரிப்பாக கருத முடியும், எத்தனை பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்?
இதனை இனச் சுத்திகரிப்பாகவே கருதுகின்றோம். வடக்கில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான சிங்களவர்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவளித்தனர். நான் சிங்கள மக்களை குறைகூறவில்லை. சிங்கள மக்கள் நல்லெண்ணம் படைத்தவர்கள்.
எனினும் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னரே இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சுயாதீனத்தன்மையும் பௌதீக ஒருமைப்பாடும் பேணப்பட வேண்டுமென்றே முதலாம் சரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறிப்பிட்ட திகதியில் சகல ஆயுதக் குழுக்களினதும் ஆயுதங்களை களைவதாக இந்தியா உடன்படிக்கையில் உறுதியளித்திருந்தது?
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கவில்லை. இந்திய அமைதி காக்கும் படையினர் பெருமளவிலனா தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றனர். வடக்கு கிழக்கின் பல பகுதிகளை இந்திய இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்திய இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
எனினும், புலிகளுக்கு யார் ஆயுதங்களை வழங்கினார்கள்? புலிகளுக்கு யார் பணம் வழங்கினார்கள்? இந்திய அரசாங்கமா இலங்கை அரசாங்கமா ஆயுதங்களை வழங்கியது. இந்தக் கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். இந்திய இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது யார் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பிரதிநிதிகள் என குறிப்பிடப்படுகிறது. அது உண்மையா?
நான் எந்தக் காலத்திலும் புலிகளின் பிரதிநிதியாக செயற்பட்டதில்லை. நான் எங்கள் மக்களுக்காக தைரியமாக குரல் கொடுத்தேன். தமிழ் மக்கள் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்து வருகின்றனர். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகளுக்காக குரல் கொடுக்கவில்லை.
எனினும், தமிழீழ விடுதலை புலி அனுதாபிகளாக செயற்பட்டுள்ளீர்கள்
நான் அனுதாபப்பட்டேன் என குறிப்பிட முடியாது. தீர்வுத் திட்டமொன்றை எட்ட பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். இதனை அரசாங்கமும் அறியும். எனினும் புலிகளுக்கு ஆதரவாக நான் பேசியதில்லை.
எனினும் பயங்கரவாத செயற்பாடுகளை நீங்கள் அங்கீகரி;த்தீர்கள் அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகவே நோக்கினீர்கள்?
இல்லை. புலிகளின் செயற்பாடுகளை நான் நியாயப்படுத்தவில்லை. புலிகளின் செயற்பாடுகளை நான் கண்டித்தேன், ஓரு காலத்தில் புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்னதாக எனது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கோ இல்லை.
எனினும் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை நீங்கள் உதாசீனம் செய்துள்ளீர்கள்?
இல்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது என்;பதே எமது நிலைப்பாடு. எவ்வாறெனினும் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசாங்ங்களின் நடவடிக்கைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டது.
வடக்கு கிழக்கில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை மத்திய அரசாங்கமே மேற்கொண்டுள்ளது. அதிகாரப் பகிர்வின்றியே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். மக்கள் சுயகௌரவத்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனைய சமூகங்களை போன் மக்கள் மதிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் சமவுரிமை காணப்படுவதாக கருதுவார்கள். நாட்டில் இரண்டாம் தரப் பிரஜையாக வாழ விரும்பவில்லை.
எனினும், இதனை அவர்கள் கோருகின்றார்களா?
ஆம். அவர்கள் இது குறித்து கரிசனை கொள்கின்றார்கள்.
இதனை அரசியல் இலக்கமாணகவே கருத வேண்டும்.
எந்த தைரியத்தில் இதனை அரசியல் இலக்கணமாக கருதுகின்றீர்கள், நான் இதனை உணர்கின்றேன். இன்றும் நான் சிங்கள மொழியிலேயே கடிதங்களை பெற்றுக்கொள்கின்றேன். அரசியல் சாசனத்தில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழியென தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.நான் ஒர் சிரேஸ்ட அரசியல்வாதி எனினும் எனக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் பல தடவைகள் அதி கூடிய விருப்பு வாக்களைப் பெற்றுக்கொண்டுள்ளேன். மாவட்ட இணைப்பு கமிட்டிளில் சிரேஸ்ட அல்லது அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டையில் இந்தத் தலைமைப் பதவி நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏன் என்னை தலைவராக நியமிக்கவில்லை.
ஏனெனில் உங்கள் மீது அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
மாவட்ட இணைப்புக் குழுவில் என் மீது அச்சம் கொள்ளக் கூடிய என்ன அதிகாரம் காணப்படுகின்றது. என்னை கழிவாக நடத்துகின்றனர். என்னை இரண்டாம் தர பிரஜையாகவே நடத்துகின்றனர். ஏனென்றால் நான் தமிழன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் முதலில் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதிலளிக்கவில்லை. அபிவிருத்தித் தொடர்பில் உங்களது கருத்து என்ன?
ஆம். சில பாலங்கள் கட்டப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன. வெளிநாட்டு உதவிகளுடன் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னர் வன்னிக்கு சென்றிருந்த போது ஜனாதிபதியை சந்தித்தேன். பிரதேச மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தேன். வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கோரினேன். பணம் எங்கிருக்கின்றது என அவர் பதில் கேள்வி எழுப்பினார். இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. மக்கள் இன்னமும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டுக்கு ஒரு சைக்கிளை வழங்குமாறு கோரினேன். ஒரு சைக்கிள் கூட வழங்கப்படவில்லை. இறுதியாக இந்திய அரசாஙகம் வீடுகள், சைக்கிள்கள் மற்றும் ட்ரக்டர்களை வழங்கின. ட்ரக்டர்களில் சிலவை வேறும் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாராளுமன்றில் கேள்வி எழுப்பியதனைத் தொடர்ந்து அந்த ட்ரக்டர்களில் சிலவை மீள அனுப்பி வைக்கப்பட்டன.
எமது மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை. எங்கள் மக்கள் கஸ்டங்களை அனுபவித்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அவர்கள் நினைக்கின்றார்கள் என கருத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஏன் தமிழ் மக்கள் இன்றும் கூட இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஏனெனில் இங்கு அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என உணர்ந்துள்ளனர்.
எனினும், தமிழ் மக்கள் மட்டுமன்றி தெற்கு சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
சில வேளைகளில் சிங்கள மக்களும் விரக்தியடைந்திருக்கக் கூடும். ஏன் விரக்தியடைந்துள்ளார்கள் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் முற்போக்கானவர் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அவருக்கு என்ன நேர்ந்தது என நீங்கள் கருதுகின்றீர்கள்?
ஜனாதிபதி இனவாத கோட்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை எனினும் அண்மைய சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் சில நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கோ அல்லது  தமிழர்களுக்கோ சரியானதாக தென்படவில்லை. மெய்யான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
அண்மையில் இந்திய பிரதிநிதிகளை சந்தித்தீர்கள், 13ம் திருத்தச் சட்டம் பற்றிய அவர்களின் கருத்து என்ன?
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட விரும்பவில்லை. இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பாகவே அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை மட்டுமா அல்லது நாட்டின் தமிழ் மக்களையா பிரதிநிதித்துவம் செய்கின்றது?
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் எங்களது கொள்கைகள் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றே கருதுகின்றோம். எங்களது கொள்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். ஏனைய பகுதிகளில் நாம் தேர்தலில் போட்டியிடவில்லை. குறித்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றி?
தற்போது அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருவோர் பற்றி எதனையும் குறிப்பிட விரும்பவில்லை. அவ்வாறு குறிப்பிட்டால் அது அவர்களது வாழ்க்கையை பாதிக்கும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போது அவர்களை வரவேற்கும் அரசாங்கம் என்னை எவ்வாறு புலி ஆதரவாளர் என குறிப்பிட முடியும் என கேள்வி எழுப்புகின்றேன்.
புலிகள் என்னை கொலை செய்ய முயற்சித்தனர் – சம்பந்தன் - Part 1 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
 தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைக் கொலை செய்ய முயற்சித்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் தமது பெயரும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சியொன்றின் தலைவராக கருதப்படுகின்றீர்கள். நீங்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முன்னெடுத்த பிரிவினைவாதத்தையே நீங்களும் முன்னெடுக்கின்றீர்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. மிகப் பழமையான தமிழ் அரசியல் கட்சியொன்றினையே பிரதிநிதித்துவம் செய்கின்றேன். அஹிம்சை வழியில் அரசியல் நோக்கங்களை வென்றெடுக்கவே விரும்புகி;ன்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாம் முயற்சித்தோம். இந்த விடயம் சில நேரங்களில் நாம் புலிகளை ஆதரிப்பதான தோற்றத்தை உருவாக்கியது. தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நசுக்கியதன் காரணமாகவே புலிகள் உருவானார்கள். 50, 60 மற்றும் 70களில் தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் பெருமளவான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.
வன்முறை வழிகளை நாம் ஆதரிக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்துள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக அமைந்துள்ளது. துரதிஸ்டவசமாக இதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.
எனினும், உங்களது நோக்கங்கள் பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது என குற்றம் சுமத்தப்படுகின்றதே?
இந்தக் குற்றச்சாட்டை சுமத்தும் தரப்பினர் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கத் தயாரில்லை என்பது வருந்ததத்தக்கது. இந்த நாடு பல்லின, பல் மத மக்கள் வாழும் நாடாகும். ஜனநாயகம் நாட்டின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரும் ஆட்சிக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படக் கூடிய முறையிலான ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த நாட்டில் சிங்கள பௌத்தவர்கள் செறிந்து வாழ்கின்றனர். ஜனநாயக ரீதியான தீர்மானம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்பதனை நீங்கள் மறுக்கின்றீர்களா?
இல்லை, இந்த நாட்டில் பெரும்பான்மையானவாகள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்த யதார்த்தை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. பெரும்பான்மை அதிகாரங்களை சிறுபான்மையினர் மீது திணிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்களும் தொன்று தொட்டு இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். முஸ்லிம் மக்களும் சில நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் முஸ்லிம் மக்கள் தனி கலாச்சார அடையாளங்களையும் பாண்பாடுகளையும் கொண்டமைந்த இன சமூகங்களாகும். சிங்கள பெரும்பான்மை மக்களின் மீது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்றோ அல்லது அவர்களை விஞ்ச வேண்டும் என்றோ நாம் கருதவில்லை. அனைத்து இன சமூகங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஐக்கிய இலங்கைக்குள்  ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தையே வலியுறுத்துகின்றோம்.
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் சாசனத்திற்கு அமைவான தீர்வுத் திட்டத்தையா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது?
ஐக்கிய நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இறைமையும் அதிகாரங்களையும் பகிர்ந்த கொள்ளக் கூடிய நிலைமையையே நாம் கோருகின்றோம். உலக அதிகார பரவலாக்கல் முறைமைகளில் இன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெளிவிவகாரம், பாதுகாப்பு, நிதிப் பாதீடு போன்ற விவகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நாம் கோரவில்லை. எனினும், அனைத்து  இன சமூகங்களினதும், சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல்  அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஐக்கிய என்ற பதத்திற்கு அரசியல் சாசனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள விளக்கத்தினையே நாம் குறிப்பிடுகின்றோம்.
வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடயத்திற்கு அரசியல் சாசன ரீதியாக அதிகாரம் அளிப்பதாக அமைந்து விடாதா?
இந்த கருத்து முட்டாள்தனமானது. உலகின் பல நாடுகளில் அதிகாரப் பகிர்வின் ஓர் அங்கமாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளிலும் காணி காவல்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கும், மாநிலங்களுக்கும் வழங்கப்படுகின்றன. 13ம் திருத்தச் சட்டத்தை முன்னாள் ஜனாதிபதிகளான ஜயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். காமினி திஸாhநயக்க மற்றும் லலித் அத்துலத்முதலி ஆகியோர் 13ம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.
13ம் திருத்தச் சட்டம் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழு காணி காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்யத் தீர்மானித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
யுத்த நிறைவின் பின்னா இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பல்வேறு வாக்குறுதிகளை  அளித்திருந்தது. 13ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ சர்வகட்சிப் பேரவை ஒன்றை நிறுவினார். இவ்வாறான ஓர் பின்னணியில் ஜே.என்.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் கோரிக்கைக்காக 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது வலுவிழக்கச் செய்யவோ முடியாது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி.யின் கோரிக்கைகளை மட்டும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக் கூடாது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தின் முக்கியமான அம்சமாக காணி, காவல்துறை அதிகாரங்களை ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.
இவை அடிப்படையான தீர்வுத் திட்டங்களாகும். டட்லி – செல்வா, பண்டா - செல்வா போன்ற உடன்படிக்கைகளில் காணி அதிகாரம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிராந்தியங்களக்கு காணி அதிகாரங்கள் அடிப்படையானவை என கருதினார்கள். காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பதனால் என்ன பயன்? லசந்த படுகொலை பற்றிய மர்மம் அம்பலப்பட்டதா? எத்தனை அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்னளர். நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலையாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனரா? மத்திய அரசாங்கத்திடம் காவல்துறை அதிகாரங்களை வைத்திருப்பதில் முக்கியத்துவம் இருப்பதாக கருதவில்லை. நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசாங்கத்திடம் காவல்துறை அதிகாரங்கள் காணப்படுவதனால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றோம்.
திரு. சம்பந்தன் அவர்களே, வடமாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்வுபு வெற்றியீட்டினால் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்படுமா என நேரடியாக கேட்கின்றேன்?
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுத் திட்டம் என்பதே எங்களது நிலைப்பாடு என்பதனை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். புலம்பெயர் தமிழர்களிடம் நான் வெளிநாடு சென்ற தருணங்களில் இதனைப் பற்றி தெளிவுபடுத்தியிருக்கின்றேன். கள நிலவரங்களை நாமே சரியாக புரிந்து கொண்டுள்ளோம். மக்கள் எங்ளை நியமித்துள்ளார்கள் மக்கள் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு எங்களிடம் காணப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக