வவுனியா மேல் நீதிமன்றத்தில் காணமல் போனவர்கள் தொடர்பாக இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற வழக்கு விசாரனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தில் காணமல் போனவர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது.
குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணமல் போனவர்களது உறவினர்கள் சுமார் நூற்றுக்கணக்காணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன் ஒன்று திரண்டு குறித்த அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இருதியாக ஊர்வலம் வவுனியா நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான சிவசக்தி ஆனந்தன் எஸ்.வினோ நோகராதலிங்கம்இவவுனியா நகர சபையின் உப தலைவர் ரதன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் மன்னார் பிரஜைகள் குழுவின் உப செயலாளர் புன்னியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக