அதன் மூலம் இணைய உலகில் பலராலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்த அவரது யுடியூப் பக்கமானது 8 இலட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது. மேலும் அவரது ஒவ்வொரு காணொளியும் இலட்சக்கணக்கான தடவை பார்வையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாலியா காலமானதாக அவரது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இச்செய்தி வெளியாகியதும் அவரது ரசிகர்கள் டுவிட்டர் உட்பட சமூகவலையமைப்புகளில் தங்களது அஞ்சலி செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இதுதவிர பிரபலங்களான எலன் டிஜெனிரஸ், மிலி சைரஸ், கெண்டால் ஜெனர், ஜஸ்டின் பைபர் ஆகியோரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக