18

siruppiddy

ஜூலை 16, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! சம்பந்தன் அறிவிப்பு


 வட தமிழீழத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் நீக்கப்படாத நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு தீவிரமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் அவ்வாறான நிலையில் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக வட தமிழீழத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுவதைத் தடுப்பதாயின் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக