18

siruppiddy

ஜூலை 11, 2013

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - ?


13வது அரசியல் அமைப்புத் திருத்தம் - சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - கெஹெலிய
 3வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால்,  சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் என  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனநாயக முறையின் அடிப்படை சந்தர்ப்பமான தெரிவுக்குழுவில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தெரிவுக்குழு முதல் முறையாக கடந்த 09 ஆம் திகதி கூடியது ஆனாலும் அதில் சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கருத்துக்கள் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பொது இணக்கப்பாட்டு வருவதற்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழு மிகவும் சிறந்த மேடை என ஜனாதிபதி இந்திய பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் போது கூறியுள்ளார்.
அதற்கு இந்தியாவின் வரவேற்பும் கிடைத்துள்ளது. தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய அழைப்பு விடுத்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக