18

siruppiddy

ஜூலை 07, 2013

மக்களை வரவழைத்து ஏமாற்றிய இராணுவம் ஒட்டுக்குழுவினர்


வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களை வணங்குவதற்காக மாவிட்டபுர முன்னரங்குக்கு மக்களை வரவழைத்து தமது ஏமாற்று வேலையை இராணுவம் அரங்கேற்றியுள்ளதாக வலிஇவடக்கு பிரதேச சபையின் உப தலைவரும் மீள்குடியேற்ற குழு தலைவருமான ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு- மயிலிட்டி மக்களை வழிபாட்டுக்காக சொந்த இடங்களுக்குச் செல்ல விடுவதாக கூறி இராணுவம் ஏமாற்றியமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் விடயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
23 வருடங்களாக மீளக் குடியமர அனுமதி மறுக்கப்பட்டு இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட பின்பு இன்று ஆலயங்களை பார்வையிட வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியாமல் இடம்பெயர்ந்த மக்களை தனது சுயநல தேவைக்காக பயன்படுத்திவரும்  ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றும் எமது இடம்பெயர்ந்த மக்களை கோயில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தனது அரசியல் வங்குரோத்துத் தனத்தைக் காட்டியுள்ளார்.
வடமாகாண சபை தேர்தல் நெருங்கும் வேளையில் உங்களுக்கு கோயில் பார்க்க ஏற்பாடு செய்தது போன்று வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவேன் என்று  ஒட்டுக்குழு தலைவர் பொய் வாக்குறுதியை வழங்கி தனது நோக்கத்தை நிறைவேற்ற எடுத்த முயற்சி இராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை ஏமாற்றி இலங்கை அரசுக்கு சேவகம் செய்துவரும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இடம்பெயர்ந்து துன்புற்றிருக்கும் மக்களை இனிமேலும் இவ்வாறான நிர்க்கதிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதோடு வலிவடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் இராணுவத்தின் பிடியிலுள்ள 1, 12000 பரப்பு நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றும் இவ்வாறு அரசியல் வாதிகளின் ஏமாற்று வேலைக்கு மக்களை பலியாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக