18

siruppiddy

ஜூலை 03, 2013

பயிற்சியுடன் பன்னாட்டு படைக்கு நிகராக சிறீலங்கா படையினர்!

சிறீலங்கா படையினருக்கு பாக்கிஸ்தான் பயிற்சி வழங்க முன்வந்துள்ளதன் மூலம் சிறீலங்கா படையினர் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா படை அதிகரி தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சிறீலங்கா படைத்தளபதி ஜெனரல் ஜெகத்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் படைத்தளபதி மகிந்த றாஜபக்சவினால் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் அதனைவிட பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறீலங்காவின் படைத்துறை அதிகாரிகளின் பதவிகள் மகிற்த றாஜபக்சவினால் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் வவுனியாவில் படையினருக்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சிறீலங்கா படையினர் பன்னாட்டு படைத்தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே பாக்கிஸ்தான் சிறீலங்கா படைஅதிகாரிகளுக்கு பயிற்வி கொடுக்க முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் குருநாகல் போன்ற மூன்று இடங்களில் போரின்போது காயமடைந்த படையினரை பராமரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு இலட்சம் படையினரை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் வன்னியில்உள்ள படையினரின் செயற்பாட்டிற்கு நிதந்தர படைமுகாமினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக