வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது.
இன்றும் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் கடும் பிளவுகள் இடம்பெற்று வருவதாக ஆளும் கட்சியின் நாடாள மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக