18

siruppiddy

ஜூலை 11, 2013

சர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயலுகின்றது -


அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான வழியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பொன்றை அரசாங்கம் இழந்து வருகிறது என சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க குற்றம்சாட்டியுள்ளார். 
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில்  பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,   .அரசாங்கம் ஒரு புறத்தில் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சிக்கிறது. மறுபுறத்தில் அது தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. இது ஒரு அர்த்தமற்ற செயலாகும். 
அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டில் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான வழியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பொன்றை அரசாங்கம் இழந்து வருகிறது. 
உள்நாட்டில் இவ்வாறான நிலையை ஏற்படுத்தி விட்டு, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயலுகின்றது.
ஆனால் சர்வதேசத்தை தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக