18

siruppiddy

ஜூலை 06, 2013

தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேப்பற்றுடைய



 
வட மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேசப்பற்றுடைய அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தேசப்பற்றுடைய அமைப்புக்களின் ஒன்றிணைந்த கூட்டணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் 13ம் திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கப்படும் வரையில் இவ்வாறு மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 13ம் திருத்தச் சட்டத்தின் பிரிவினைவாத சரத்துக்களை நீக்குமாறு கோரியுள்ளதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இன முறுகல் நிலைமைகள் ஏற்படுவதனை தடுப்பதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தில் திருத்தங்;கள் செய்யாது வட மாகாணசபையில் தேர்தலை நடாத்தி ஈழத்தை அமைக்க சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துணை போகக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக