18

siruppiddy

ஜூலை 27, 2013

தமிழ் மக்கள் சொத்து தனியார் மயமாவதா?



கனடிய  தமிழ் மக்கள் கொதிப்பு தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர்.

அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர்.
அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக்கையானவர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
தமிழர் சொத்தான இவ் ஊடகங்களை தமிழ் மக்கள் நலனுக்காகவே நல்ல முறையில் பேணுவார்கள், இதனை தமிழ் மக்கள் சொத்தாகவே தொடர்ந்தும் பேணுவார்கள், வரும் வருவாயை தமிழ் மக்கள் நலன்களுக்கு பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அனைத்துத் தமிழ் மக்களிடமும் இருந்தது.
அதேவேளை இவ் மக்கள் சொத்தை மக்கள் பிரிதிநிதிகளைக் கொண்ட அறங்காவல் குழு ஒன்றின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இதனை யாரும் கையகப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டன.
இந்நிலையிலேயே உரிமை கோரி பிரபா செல்லத்துரை வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கே தற்போது தமிழர் சொத்தான ஊடகங்களின் உரிமையாளர் யார் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) முழுமையான உரிமையாளர் நான் தான் என சொல்கிறார் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி. இல்லை தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI) இல் இருந்து தான் கனடிய பல்கலாச்சார வானொலி வந்தது எனவே நான் தான் உரிமையாளர் என்கிறார் பிரபா செல்லத்துரை.
இது மக்கள் சொத்து என்ற ஒரே காரணத்துக்காக தங்கள் நேரம், பணம், அனைத்தையும் ஒதுக்கி இவ்வூடகங்களினூடாக எந்தவொரு வருவாயையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணி செய்ய பல நூற்றுக்கணக்கானோர் இன்று ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் சொத்து என நம்பித் தோள் கொடுத்த பல வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை நிர்வாக குழுவில் இருக்கும் பலர் தொடர்ந்தும் மக்கள் பக்கமே உறுதியாக உள்ளனர். மக்கள் வழங்கிய பொறுப்பிற்கு பாத்திரமாகவும் உள்ளனர். பொறுப்பில் இருந்த இருக்கும் சிலர் தமது உறவினர்களை (முழுமையாக விபரம் விரைவில் வெளியிடப்படும்) இவ் நிர்வாக குழுவில் நியமித்துவிட்டு அவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டே இன்று இவ் தமிழ் மக்கள் ஊடகங்களை தம் சொத்துரிமையாக்க முயல்கின்றனர். படித்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று நம்பியவர்களே இவ்வாறு சோரம் போவதே தமிழ் மக்கள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
மக்கள் சொத்தில் ஏன் இந்த வெறி என்று சிலர் கேட்பது புரிகிறது. குறிப்பாக ஒரு பண்பலை வானொலி (FM) தற்போது பல மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்பதே இதன் பின் உள்ள சூத்திரமாகும். மக்கள் நலனுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தை வளப்படுத்தவும், தங்கள் குடும்பம் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்று சிலர் நினைப்பதுவும் தான் முள்ளிவாய்கால் பேரவலம் போல் இங்கும் விரிகிறது.
அதிலும் வேதனையான விடயம் நம்பிக்கைக்கு துரோகமாக பண விடயத்திலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக தொடர்ந்தும் ஆதாரங்களுடன் வெளிவரும் செய்திகளே. அதுவும் பல லட்சம் டொலர்கள் பெறுமதியான மோசடிகள் என்கிறது தகவல்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் சுருட்டியது போதாது என்று முழுமையாக கையகப்படுத்தவும் சிலர் முனைவது தான்.
ஒன்றுக்கு ஒன்று தம்மை வலுப்படுத்தி நிற்கும் என்று கருதப்பட்ட மூன்று ஊடகங்களும் இன்று தனியாக்கப்பட்டுள்ளன. இதில் கனடியத் தமிழ் வானொலி மட்டும் முழுமையான மக்கள் சொத்தாக்கும் நிலையில் உள்ளது. ஏனைய இரண்டும் தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) என்பவற்றை தம் தனிப்பட்ட சொத்தாக்க முயற்சிகள் தொடர்கின்றன.
இதில் மாற்றத்தை ஏற்படுத்த பல்தரப்பாலும் எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் எந்தவித நல்ல பெறுபேறையும் எட்டவில்லை. அலைக்கழிப்பும், ஏமாற்றலுமாகவே இம்முயறிசகள் முள்ளிவாய்காலுக்கு பின்னரான நான்கு வருடமும் கழிந்துள்ளது. இந்நிலையிலேயே பொறுத்தது போதும் என்ற வகையில் கனடிய தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கனடிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்ப முனைந்துள்ளனர்.
கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) மீண்டும் தன் உரிமத்தை புதுப்பிக்க முனைந்துள்ள நிலையில் அதில் தான் தான் முழுமையான உரிமையாளர் என்று ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி கோருவதை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியுமாறு கோருகின்றனர்.
மக்கள் சொத்தான ஊடகத்தை மக்கள் சொத்தை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றனர். மக்களின் இப்பேரெழுச்சி மக்கள் சொத்தை காக்கும் எனத்திடமாக நம்புவோம். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் ஈனப்பிறப்பை கைவிடுவோம். மேலும் விபரமான விபரங்கள் விரைவில்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக