18

siruppiddy

ஜூலை 19, 2013

ஒன்றும் இல்லாத கழுததைகள் அமைச்சர்கள் ஆகிறார்கள்


 மாகாண சபைத் தேர்தல்களில் சில அமைச்சர்களின் சோற்று பொதிகளுக்காக வாக்குகளை கவரும், கபடத்தனமாக அரசியலை தோற்கடிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தாய் நாட்டுக்கு அழுத்தங்கள் வரும் போது, குரல் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை.  சிலர் வேலைவாய்ப்புகளை பெற எந்த தகுதியும் இல்லாத நிலையிலேயே அரசியலுக்கு வருகின்றனர்.
சில அமைச்சர்கள் அரசாங்க பணிகளுக்கு விண்ணப்பித்தல், அவர்களுக்கு கூலி தொழிலாளி பணியே கிடைக்கும். காரணம் அவர்களுக்கு எந்த கல்வி தகுதியுமில்லை. இவர்கள் அரசியலுக்கு வந்து வார்த்தை ஜாலங்களால் மக்களை கவர்கின்றனர்.
உண்மையான அரசியல்வாதிகள், தமது அறிவைப் பயன்படுத்தியே வாக்காளர்களுடன் பேசுவார்கள். உடலில் முக்கியமான உறுப்பு தலை பகுதி என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியாது. இதனை அவர்கள் பயன்படுத்துவதில்லை.  எந்த கழுதைக்காவது வாக்களித்து அரசியலை விமர்சிக்கின்றனர். இன்றும் அரசியல் விமர்சிக்கப்படுகிறது. கழுதைகள் இன்றும் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்குகளை வழங்கும் முன்னர் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக