வடக்கு தேர்தலில் என்னிடமே கூடிய வேட்பாளர்கள் இருக்கப் போகின்றார்கள். வடக்கு தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட 20 பேருக்கு இடமொதுக்கப்பட்டு உள்ளது. அவ்வகையில் வடக்கிற்கான முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் என்னிடமே இருக்கும்.
ஜனாதிபதியுடன் பேசி நானே முதலமைச்சரை தெரிவு செய்வேன் என டக்ளஸ் தெரிவித்தார். யாழ்.பொதுசன நூலகத்தல் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் வடக்கு தேர்தலில் தாங்களும் போட்டியிடுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கவில்லை. இது பற்றி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வேளை அறிவிப்பேன். அது அதிர வைக்கக்கூடிய முடிவாக இருக்கும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக